பசியுடன் போராடும் காசா மக்கள் – 5 நாட்களாக நிவாரணப் பொருட்கள் விநியோகித்த அமீரகம்

காசாவில் தொடர்ந்து 5வது நாளாக, விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை பாராசூட் உதவியுடன் ஐக்கிய அரபு அமீரகம் வீசியது.
இந்த முயற்சியின் கீழ் இதுவரை சுமார் 4,000 டன் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
விமான நிவாரணத்துடன் கூடுதலாக, தரைமார்க்கமாகவும் உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன. 41 லொரிகள் உணவுப் பொருள்களுடன் மற்றும் 12 லாரிகள் மருந்துப் பொருள்களுடன் காசா பகுதியில் நுழைந்துள்ளன.
இஸ்ரேலின் தடைகளை எதிர்கொண்டு வந்த நிலையில், சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையடுத்து, இஸ்ரேல், நிவாரணப் பொருள்கள் காசாவுக்குள் அனுப்ப அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் தலைமையிலான நிவாரண நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன.
போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட காசா மக்கள், தொடர்ந்து உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு உள்நோக்கியுள்ள நிலையில், இந்த உதவி முயற்சி வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியோருக்கு ஓர் உதவி பயணமாக பார்க்கப்படுகிறது.