உலகம் செய்தி

காஸா பணயக்கைதிகள் விடுதலை தாமதம்

 

காஸா பகுதியில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் குறித்து சில நம்பிக்கைகள் எழுந்துள்ளன.

இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதையடுத்து, ஹமாஸ் பிடியில் இருந்த பணயக் கைதிகளையும், இஸ்ரேலால் பிடிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளையும் பரிமாறிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று இஸ்ரேல் நேரப்படி காலை 10 மணிக்கு போர் நிறுத்தம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஹமாஸ் தனது பிடியில் உள்ள 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதுடன், இஸ்ரேலால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

இன்று பரிமாற்றம் நடைபெறும் என முன்னதாக செய்திகள் வெளியாகின.

எனினும், பிணைக் கைதிகள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் அமைப்பினர் போர்நிறுத்தம் குறித்து பேசினாலும் தாமதமாகும் என இஸ்ரேல் கூறியுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி