உலகில் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறிய காசா
உலகிலேயே குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் காசா என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் கேத்தரின் ரஸ்ஸல், கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் காசா பகுதியில் போர் காரணமாக 5,300 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது போரினால் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கையில் 40 வீதம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் மேலும் 200 குழந்தைகள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதாக யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.
சுமார் 5,500 கர்ப்பிணித் தாய்மார்கள் அடுத்த மாதத்தில் குழந்தைப் பேற்றை எதிர்பார்க்கின்றனர் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
(Visited 7 times, 1 visits today)