காசாவை தாக்கும் புயல் பைரன் – இயற்கை சீற்றங்களும் விட்டுவைக்கவில்லை
இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரால் அழிக்கப்பட்ட காசா பகுதியில் புயல் பைரன் காரணமாக, கடந்த 24 மணித்தியாலங்களில்
சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா பகுதியில் ஏராளமான வீடுகள், சுவர்கள் மற்றும் கூடாரங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் சீரற்ற வானிலையை எதிர்கொள்ளும் பலஸ்தீனியர்களுக்கு போதுமான வளங்கள் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் சுமார் 70,369 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலம் 171,069 பேர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





