ஐரோப்பிய நாடுகளில் வேகமாக அதிகரிக்கும் எரிவாயு விலை!

பிரித்தானியாவில் டிசம்பருக்குப் பிறகு எரிவாயு விலை உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து ஐரோப்பா முழுவதும் இயற்கை எரிவாயுக்கான மொத்த விற்பனைச் செலவுகள் மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன. இதனால் எதிர்காலத்தில் எரிசக்தி கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதற்கு பிரதான காரணமாக நோர்வே கடற்பகுதியில் எரிவாயு குழாய் வெடித்தமையால் அதன் இணைப்பு துண்டிக்கப்பட்டதை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Sleipner Riser பிளாட்ஃபார்மில் கண்டுபிடிக்கப்பட்ட சேதம், இங்கிலாந்திற்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் Nyhamna செயலாக்க ஆலை உட்பட பரந்த எரிசக்தி உள்கட்டமைப்பை நிறுத்தத் தூண்டியமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)