பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வெடித்த எரிவாயு சிலிண்டர் – 12 பேர் காயம்
இஸ்லாமாபாத்தில்(Islamabad) உள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற கட்டிடத்தின் அடித்தள சிற்றுண்டிச்சாலையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் ஏர் கண்டிஷனிங்கை(குளிரூட்டி) பழுதுபார்க்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், “குளிரூட்டியை பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மிகவும் கடுமையான காயங்களுக்கு ஆளானதாகவும், ஒரு தொழில்நுட்ப வல்லுநரின் உடலில் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்லாமாபாத்தின் காவல்துறைத் தலைவர் அலி நசீர் ரிஸ்வி(Ali Nazir Rizvi) குறிப்பிட்டுள்ளார்
மேலும், பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்திலும் (PIMS) ஒன்பது பேர் பாலிகிளினிக்(Polyclinic) மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




