இந்தியா செய்தி

சென்னையில் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

சென்னையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 320 கிலோகிராம் கஞ்சாவை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCB) பறிமுதல் செய்துள்ளது.

மேலும், கடத்தல் நடவடிக்கை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரனோடை (Karanodai) அருகே ஒரு லாரியை வழிமறித்த சென்னை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 150 கஞ்சா பொதிகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதிகள் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

ஓட்டுநர் மற்றும் போலி எண் தகடுகளை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவரும் ஒரு பரந்த கடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், மற்ற உறுப்பினர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி