இலங்கையில் இலஞ்ச ஊழல் வலையில் சிக்கிய கும்பல் – பொலிஸாரும் உள்ளடங்குவதாக தகவல்

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 2,142 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்ச ஊழல் தொடர்பான 158 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
379 ஊழல் புகார்களும், 79 முறைகேடான ஆதாய முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.
அத்துடன், இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவர்களில் 8 பொலிஸாருக்கு அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த காலகட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக 25 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவர்களில் 11 பேர் குற்றவாளிகள் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 28 times, 1 visits today)