ஈக்குவாடோரில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட குற்றக்கும்பல் – 07 பேர் பலி!

ஈக்குவாடோரின் வடப்பகுதியில் குற்றக் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் குயிட்டோவிற்கு மேற்கே 130 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில் அமைந்துள்ள சாண்டோ டொமிங்கோ டி லாஸ் சச்சிலாஸ் நகரில் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு குற்றக் கும்பல்களுக்கு இடையிலான “பிராந்திய தகராறு” காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)