NBA-வை அதிர்சிக்குள்ளாக்கிய சூதாட்டப் புகார்கள்: முன்னாள் சாம்பியன் சௌன்சி பில்லப்ஸ்(Chauncey Billups) கைது
போர்ட்லேண்ட் டிரெயில் பிளேஸர்ஸ் (Portland Trail Blazers) அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் NBA(National Basketball Association) சாம்பியனுமான சௌன்சி பில்லப்ஸ் (Chauncey Billups), மாஃபியாவுடன் (Mafia) தொடர்புடைய சட்டவிரோத போக்கர் (Poker) சூதாட்டச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது NBA உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் FBI நடத்திய விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி கைதுகள் நடந்துள்ளன.
பில்லப்ஸ், சட்டவிரோத போக்கர் ஆட்டங்களை நடத்தியதாகக் கூறப்படும் ஒரு பெரிய வலையமைப்பில் சிக்கியுள்ளார். இந்த வலையமைப்புக்கு ‘லா கோசா நோஸ்ட்ரா’ (La Cosa Nostra) போன்ற மாஃபியா குழுக்களின் ஆதரவு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து NBA இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.





