செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கடந்த (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றையதினம் முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

நவம்பர் 14ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ் , கிளிநொச்சி தேர்தல் தாெகுதியில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியதனை தொடர்ந்து, இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு சென்று சுடர் ஏற்றி, மலர் தூவி வணக்கம் செலுத்தி உரிமைப் பயணத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இனவழிப்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து அரசியல் உறுப்பினர்கள் அனைவருமாக சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த அஞ்சலியின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி