கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பிக்கு முக்கிய பதவி!
இலங்கை – பெல்ஜியம் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
இந்தச் சங்கத்தின் மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
பெல்ஜியத்தின் இலங்கைக்கான ஹொனொரரி கொன்சல் கோன்ராட் பிரிஞ்சியர்ஸ் (Mr. Koenraad Pringiers) கௌரவ விருந்தினராக இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத நட்புறவுச் சங்கத்தின் சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மசிறி பண்டார மற்றும் ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோர் இணைப் பொருளாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.





