இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் கஜேந்திரகுமார் விடுத்த கோரிக்கை
சமஷ்டி அடிப்படையிலான தீர்வை, புதிய ஜனாதிபதி முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசத்தினுடைய சுயநிர்ணய உரிமையை முழுமையாக ஏற்றுக்கொள்கின்ற, சமஷ்டி அடிப்படையிலான தீர்வை அவர் கோரியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.
அத்துடன் தென்னிலங்கை மக்களை தெளிவுபடுத்தி, முன்வைக்கப்படும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு, தமது கட்சி ஆதரவு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





