ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய சொத்துகளை பயன்படுத்த G7 அமைப்பு ஆலோசனை

உக்ரைனுக்கு உதவ ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து கிடைக்க இருக்கும் லாபத்தைப் பயன்படுத்துவது பற்றி G7 நாடுகள் முடிவெடுக்க உள்ளன.

G7 அமைப்பில் இடம்பெற்று உள்ள நிதித் தலைவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

2022 பிப்ரவரியில் தனது அண்டை நாடான உக்ரைரேன் மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கிய சிறிது நாள்களிலேயே ரஷ்யாவின் US$300 பில்லியன் (S$405 பில்லியன்) சொத்துகள் சிலவற்றை G7 அமைப்பு முடக்கியது.

“முடங்கிக் கிடக்கும் ரஷ்யாவின் அரசுரிமைச் சொத்துகளில் இருந்து கிடைக்கும் மிதமிஞ்சிய லாபத்தின் மூலம் உக்ரைன் பலனடைவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகிறோம்,” என்று G7 அமைப்பு வரைந்த அறிக்கையை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இருப்பினும், வெளிப்படையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அந்த அறிக்கையில் முக்கிய மாற்றங்கள் இருக்காது என்றது ராய்ட்டர்ஸ்.

ஈராண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் தனது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை ரஷ்யாவிடம் பறிகொடுத்துவிடாமல் தக்கவைத்துக்கொள்ள உக்ரைன் கடுமையாகப் போராடி வருகிறது.

இந்நிலையில், G7 நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் உக்ரேனிய நிதி அமைச்சர் செர்ஹைவ் மார்சென்கோ பங்கேற்க உள்ளார்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!