ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை அதிகரிப்பவர்களை குறிவைப்போம் ; அறிக்கை வெளியிட்டுள்ள G7
ஏழு நாடுகளின்(G7) நிதி அமைச்சர்கள் குழு புதன்கிழமை ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை தொடர்ந்து அதிகரித்து வருபவர்களையும், மோசடியை எளிதாக்குபவர்களையும் குறிவைத்து ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க கூட்டு நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரிவித்தது.
மாஸ்கோவின் உக்ரைன் படையெடுப்பு காரணமாக ரஷ்ய வருவாயைக் குறைக்கும் முயற்சிகளில் வரிகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடைகள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை G7 நிதி அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். நிதியமைச்சரின் மெய்நிகர் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தியா மற்றும் சீனா போன்ற ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குபவர்கள் மீது வரிகள்,புதிய தடைகளை விதிக்க வாஷிங்டன் தனது நட்பு நாடுகளிடம் அழைப்பு விடுத்துள்ளது. சீனா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்து டிரம்ப் சீன இறக்குமதிகள் மீது கூடுதல் வரிகளை விதிப்பதை தவிர்த்துள்ள நிலையில், அவரது நிர்வாகம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறக்குமதிகள் மீது கூடுதல் வரிகளை விதித்து புது டெல்லியை குறிவைத்துள்ளது.
புதன்கிழமை வெளியான G7 அறிக்கையில் இந்தியா அல்லது சீனாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
உக்ரைன் படையெடுப்பிலிருந்து ரஷ்ய எண்ணெய் கொள்முதலை தொடர்ந்து அதிகரித்து வருபவர்களையும், மோசடியை எளிதாக்குபவர்களையும் நாங்கள் குறிவைப்போம் என்று G7 இன் அறிக்கை தெரிவிக்கின்றது.
ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு நிதியளிக்க உதவும் நாடுகள் மீதான வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் குறித்து G7 வெளியுறவு அமைச்சர்கள் தீவிர பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். அறிக்கையில் எந்த நாடும் அடையாளம் சுட்டிக்காட்டப்படவில்லை.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு பிப்ரவரி 2022 இல் தொடங்கியது. மாஸ்கோ 2014 இல் கிரிமியாவை இணைத்தது.அதன் போர் முயற்சிகளுக்கு நிதியளிப்பதைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கருத்தில் கொண்டு வரும் மேற்கத்திய சக்திகளிடமிருந்து ரஷ்யா கடுமையான தடைகளை எதிர்கொண்டுள்ளது.





