இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அமைப்பிற்கு G7 நாடுகள் வரவேற்பு

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்திய, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையின் கீழான நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஹீரொஸிமா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஜீ-7 நாடுகளின் தலைவர்களது 49ஆவது மாநாடு நாளை வரை இடம்பெறவுள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் நடுத்தர வருமான நாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான எதிர்கால பலதரப்பு முயற்சிகளுக்கு ஒரு வெற்றிகரமான முன்மாதிரியாக விரைவான தேர்வு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
(Visited 14 times, 1 visits today)