GOAT முதல்நாள் வசூல்… உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.
விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் படமாக கோட் உள்ளதால் இப்படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே வந்த வண்ணம் உள்ளன. பொதுவாக விஜய் படம் ரிலீஸ் ஆனால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இரண்டு விஷயம் தான்.
ஒன்று படத்தின் விமர்சனம், மற்றொன்று படத்தின் வசூல். அதன்படி கோட் திரைப்படம் முதல் நாளில் எத்தனை கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக்குவித்துள்ளது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் படம் ஒரே நாளில் 126.32 கோடிகளை அள்ளியுள்ளது. எனினும் இதற்கு முன்னர் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஒரே நாளில் 148 கோடிகளை வசூலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://x.com/archanakalpathi/status/1832013735105372467
(Visited 35 times, 1 visits today)