இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால குழு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை மீண்டும் ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், தொடர்ந்து மூன்றாவது தடவையாக குறித்த விசாரணை நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றில் மீள் பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இந்த மனுவை ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்துள்ளார்.
நவம்பர் 16 அன்று, நீதிபதி நீல் இத்தவெல வழக்கிலிருந்து விலகியதையடுத்து, புதிய நீதிபதிகள் குழுவின் முன் தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.