புதிய கட்டிடத்திற்கு 2026 இல் நிதி ஒதுக்கீடு- பார்வையிட சென்ற அரசியல்வாதிகள்!!
திருகோணமலை- வான்எல மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன இன்று (26) விஜயம் செய்தனர்.
கந்தனாய் கல்வி வலயத்திற்குட்பட்ட வான்எல மகா வித்தியாலயத்தில் இடப்பற்றாக்குறை காணப்படுவதாக பாடசாலை சமூகத்தினரால் அரசியல் பிரமுகர்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை கருத்தில் கொண்டு அவசரத் தேவையாக இருக்கும் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு 2026 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டு திட்டத்துடன் கல்லூரியின் வளர்ச்சி குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருடன் கலந்துரையாடலொன்றும் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.





