இலங்கை

எரிபொருள் விலையில் திருத்தம்! பெற்றோல் விலை?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) இன்று (ஜூலை 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 348 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 258 ரூபா என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஒரு லீற்றர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 306 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை லீற்றர் ஒன்றிற்கு 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 226 ரூபாவாகும்.

அதன்படி, புதிய விலைகள் பின்வருமாறு:

ஒக்டேன் 92 பெட்ரோல் – ரூ. 348 (ரூ. 20 அதிகரித்துள்ளது)
ஒக்டேன் 95 பெட்ரோல் – ரூ. 375 (ரூ. 10 அதிகரித்துள்ளது)
சூப்பர் டீசல் – ரூ. 358 (ரூ. 12 அதிகரித்துள்ளது)
ஆட்டோ டீசல் – ரூ. 308 (ரூ. 2 குறைக்கப்பட்டது)
மண்ணெண்ணெய் – ரூ. 226 (ரூ. 10 குறைக்கப்பட்டது)

இதேவேளை, CPC இன் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐஓசியும் இன்று (மே 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்