இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 11 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 344 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 41 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 379 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 22 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





