இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்

சிபெட்கோ நிறுவனம் எரிபொருள் விலையை இன்று (31) நள்ளிரவு முதல் திருத்தியமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 92 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 356 ரூபாவாகும்.

95 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் புதிய விலை 423 ரூபாய்.

லங்கா டீசலின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மண்ணெண்ணெய் விலையும் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது

இதேவேளை, 95 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை