கடுமையான தீர்மானத்திற்கு தயாராகும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களிலும் எரிபொருளின் விலையை ஒரே விலைக்கு கொண்டு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய விநியோக முகமைகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒழுங்குமுறை நிறுவனம் ஒன்றை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனை மிக விரைவாக செய்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாக ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
வரவிருக்கும் எரிபொருள் விலை திருத்தத்தில், அனைத்து நிறுவனங்களும் போட்டியைப் பொறுத்து அதே விலையில் அல்லது சிறிது வித்தியாசத்தில் எரிபொருளை விற்பனை செய்வதற்கான சூழலை தயார் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் சங்கமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உரிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.