யாழில் விற்பனை செய்யப்பட்ட தவளை ஐஸ்கிரீம்!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே குளிர்களி குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் இது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)