ஜெர்மனியின் அடுத்த சான்ஸ்லராகும் பிரைட்ரிச் மெர்ஸ்

ஜெர்மனியின் அடுத்த சான்ஸ்லராக பிரைட்ரிச் மெர்ஸ் (Freidrich Merz) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பொதுத்தேர்தலில் அவரது கட்சி 28.5 சதவீத வாக்குளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
எனினும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சவால்மிக்க பணியில்மெர்ஸ் ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதுவரை ஜெர்மானிய சான்ஸ்லராக ஒலாப் ஷோல்ஸ்இன்னும் சில மாதங்கள் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் கடந்த 2 வருடங்களாக ஜெர்மனியில் நீடிக்கும் பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்யும் பணியில் பின்னடைவு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கான உறுதியான தலைமைத்துவம் உருவாவதிலும் தாமதம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)