வெனிசுலாவில் சிறை வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நபர் விடுதலை!
வெனிசுலாவில் (Venezuela) கடந்த நான்கு மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த கமிலோ காஸ்ட்ரோ (Camilo Castro) விடுதலை செய்யப்படவுள்ளதாக பிரான்ஸ் இன்று அறிவித்தது.
இது தொடர்பில் X தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் (Jean-Noel Barrot), காஸ்ட்ரோவை சிறையில் இருந்து விடுவித்ததற்கு பிரெஞ்சு இராஜதந்திரிகளை பாராட்டினார்.
அத்துடன் காஸ்ட்ரோ விமானம் மூலம் மீண்டும் பிரான்ஸிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
41 வயது யோகா ஆசிரியரான காஸ்ட்ரோ கடந்த ஜூன் மாதம் அண்டை நாடான வெனிசுலாவைக் கடந்து சென்ற பிறகு காணாமல் போனார்.
பின்னர் அவர் வெனிசுலாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




