கருக்கலைப்பு உரிமைக்கு பிரெஞ்சு செனட் சபை ஒப்புதல்!
கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்புச் சட்டமாக்குவதற்கான முன்மொழிவுக்கு பிரெஞ்சு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 267 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் கிடைத்துள்ளன.
கருக்கலைப்பு 1974 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் சட்டப்பூர்வமாக உள்ளது மற்றும் அரசியலமைப்பின் மூலம் அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பான தீர்மானம் ஐந்தில் மூன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதால் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 3 times, 1 visits today)