ஈரானிய மாணவியை நாடு கடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவு!
சமூக ஊடகப் பதிவுகளில் பயங்கரவாதத்தை ஆதரித்து கருத்து பதிவிட்ட ஈரானிய பிரஜை ஒருவரை குற்றவாளியாக அறிவித்து பிரான்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதற்கமைய லியோன் நகரில் வசிக்கும் மாணவி மஹ்தியே எஸ்ஃபாண்டியாரிக்கு (Mahdieh Esfandiari) 04 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தண்டனை காலம் முடிந்ததும் அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மஹ்தியே சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தீர்ப்பை கடுமையாக விமர்சித்ததுடன், மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்தார்.
குறித்த மாணவி கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலைப் பாராட்டி சமூக ஊடகப் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




