ஐரோப்பா

பின்லாந்தில் உறைபனியுடன் கூடிய வானிலை – விமானங்கள் இரத்து!

பின்லாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பனி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை விமான நிலையத்தில் வெப்பநிலை மைனஸ் 37 டிகிரி செல்சியஸாக (மைனஸ் 34.6 டிகிரி பாரன்ஹீட்) குறைந்ததாகவும், இதனால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை குறைவாக உள்ள பின்லாந்தின் கிட்டிலாவில் (Kittilä) ஆழ்ந்த உறைபனி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதிகளில் வெப்பநிலை -40 பாகை செல்சியஸாக பதிவாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்லாந்து மக்கள் பொதுவாக உறைபனி குளிர்கால வெப்பநிலைக்கு பழக்கப்பட்டவர்கள்.  ஆனால்   இந்த ஆண்டு குளிர்காலநிலை  மற்ற ஆண்டுகளை விட மிகவும் கடுமையானது எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!