லிபியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் விடுதலை!

கிரீஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான எம்.டி.மாயா-1 என்ற வணிக கப்பல் மால்டாவில் இருந்து லிபியா நாட்டு தலைநகர் திரிபோலிக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்றது.
கப்பலில் இந்தியாவை சேர்ந்த 9 மாலுமிகள் பணியாற்றினர். குறித்த கப்பல் லிபியாவின் கடற்கரைக்கு அருகே வந்தபோது நடுகடலில் பழுதடைந்தது. இதன்போது கப்பலில் இருந்தவர்களை லிபியா உள்ளூர் போராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
கப்பலில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகளை மீட்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது குறித்த மாலுமிகள் விடுவிக்கப்பட்டு, தலைநகர் திரிபோலியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவில் இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)