ஜெர்மனியில் 2000 யூரோக்களுக்கு இலவச உணவு – பொலிஸாருக்கு நேர்ந்த கதி
ஜெர்மனியில் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் நீடசக்சன் மாநிலத்தில் கடமை ஆற்றுகின்ற 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அந்த பிரதேசத்தில் உள்ள அரச தரப்பு சட்டத்தினர் வழக்கு விசாரண ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது குறித்த பொலிஸ் அதிகாரிகள் பே அம்ட் என்று சொல்லப்படுகின்ற அதிகார தளத்தில் உள்ளவர்கள். மேலும் இவர்கள் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் 2000 யுரோக்களுக்கு இலவசமான முறையில் உணவை உட்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக இந்த வழக்கு விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜெர்மனியில் அதிகார தரத்தில் உள்ளவர்கள் பிறரிடம் இருந்து எவ்வகையான பரிசு பொருட்களையும் பெற கூடாது என்பது சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயமாகும்.
இந்நிலையில் இவர்கள் இந்தவகையில் 2000 யுரோக்களுக்கு இலவசமாக உணவு உட்கொண்டார்கள் என்பது ஜெர்மன் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமான செயல் என கருதப்படுகின்றது.
அதனால் இவர்களுக்கு எதிராக இவ்வாறு அரசியல் தரப்பு சட்டத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.