இலங்கையில் விவசாயிகளுக்கு இலவச டீசல்
விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 40 லீற்றர் டீசல் இலவசமாக வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு நேற்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்றது.
அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த எரிபொருள் மானியம் கடந்த ஆண்டு பருவத்தில் பயிர் சேதங்கள் பதிவாகிய வளவ பிரதேசம், ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பயிர் சேதங்களை சந்தித்த அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும்.
கடந்த பருவத்தில் நெல் பயிர்ச்செய்கைக்காக சீன அரசாங்கம் 6.9 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக விநியோகிப்பதற்கு விவசாய அமைச்சுக்கு வழங்கியிருந்ததுடன், எஞ்சிய 2 மில்லியன் லீற்றர் டீசலை விவசாயிகளுக்கு விநியோகிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.