ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் வரலாறு காணாத அளவு அதிகரித்த சிறைக்கைதிகள் – நெருக்கடியில் அதிகாரிகள்

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சிறைச்சாலைகள் இடவசதி இன்றி நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் முதலாம் திகதி அன்று நிலவரப்படி 80.130 கைதிகள் பிரெஞ்சு சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மொத்தமாக 62,357 கைதிகளுக்கான சிறைச்சாலைகளே உள்ளன. ஆனால் 17,000 இற்கும் மேற்பட்ட கைதிகள் மேலதிகமாக சிறை வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதன் அளவை விட 200 சதவீத கைதிகளை சிறைவைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போதிய படுக்கை வசதி ஒன்றி தரைகளிலும், சில சிறைச்சாலைகளில் இருவர் தங்கக்கூடிய ஒரு அறையில் 10 கைதிகள் வரை அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டில் 15,000 பேருக்கான சிறை ஒன்று திறக்கப்பட உள்ள நிலையில், ஏற்கனவே அந்த எண்ணிக்கையை பிரான்ஸ் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!