விலையுயர்ந்த நகைகளை இடமாற்றம் செய்யும் பிரான்சின் லூவர்(Louvre) அருங்காட்சியகம்
கடந்த வாரம், பிரான்சில் அமைந்துள்ள உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகத்தில் 102 மில்லியன் டாலர் மதிப்புள்ள 08 நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
மேலும், அதிக பாதுகாப்பு கொண்ட லூவர்(Louvre) அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை வெறும் 07 நிமிடங்களில் அரங்கேற்றப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக லூவர் அதன் மிகவும் விலையுயர்ந்த நகைகளில் சிலவற்றை பாங்க் ஆப் பிரான்ஸிற்கு (Bank Of France) மாற்றியுள்ளது.
பிரெஞ்சு கிரீட நகைகள் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் இருந்து சில விலைமதிப்பற்ற பொருட்களை ரகசிய காவல்துறையின் பாதுகாப்பின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.
நாட்டின் தங்க இருப்புக்களை தரையில் 27 மீட்டர் (88 அடி) கீழே ஒரு பெரிய பெட்டகத்தில் சேமித்து வைத்திருக்கும் பிரான்ஸ் வங்கியில் இந்த நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்தி
வெறும் 07 நிடங்களில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவம் – புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!




