லு பென்னுக்கு ஆதரவாக பாரிஸில் பேரணி நடத்த பிரான்சின் தீவிர வலதுசாரிகள் அழைப்பு
பிரான்சின் தீவிர வலதுசாரித் தலைவர் ஜோர்டான் பார்டெல்லா, பாரிஸின் மையத்தில் மக்கள் பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
மரைன் லு பென் ஐந்து ஆண்டுகளுக்கு பொதுப் பதவிகளுக்கு போட்டியிடுவதைத் தடைசெய்த தீர்ப்பை எதிர்த்துப் போராட விடுக்கப்பட்டுள்ளது.
2004 மற்றும் 2016 க்கு இடையில் ஐரோப்பிய ஒன்றிய நிதியில் இருந்து $3.4 மில்லியன் மோசடி செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையின் மையத்தில் அவர் இருந்ததாக நீதிபதிகள் கூறியபோது, 2027 இல் பிரான்சின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கான லு பென்னின் முயற்சி சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.





