பிரான்ஸ் காட்டுத்தீ – ஒருவர் பலி, 11 பேர் படுகாயம்!
பிரான்சில் ஏற்பட்ட காட்டுத்தீயால் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
அங்கு 1,500 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு பிரான்சில், பெர்பிக்னானுக்கு வடக்கே தற்போது பரவி வரும் காட்டுத்தீயால் 13000 ஹெக்டேர்கள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்படுகிறது.
இது 2024 முழுவதும் பல காட்டுத்தீயால் எரிக்கப்பட்ட மொத்த பரப்பளவிற்கு சமம் என்றும், 2023 இல் அனைத்து காட்டுத்தீயால் எரிக்கப்பட்ட மொத்த பரப்பளவை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.





