உக்ரைனுக்கு 100 போர் விமானங்களை விற்க பிரான்ஸ் ஒப்புதல்
அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் உக்ரைனுக்கு தனது இராணுவ ஆதரவை மட்டுப்படுத்தியுள்ளதால், ஐரோப்பிய ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, உக்ரைனுக்கு(Ukraine) 100 ரஃபேல் போர் விமானங்களை(Rafale fighter jets) விற்பனை செய்வதாக பிரான்ஸ்(France) உறுதியளித்துள்ளது.
போர் விமானங்களுடன் கூடுதலாக பல்வேறு பிரெஞ்சு பாதுகாப்பு உபகரணங்களும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன்(Sweden) 150 போர் விமானங்களை உக்ரைனுக்கு விற்க ஒப்புக்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தம் “நமது இரு நாடுகளுக்கும் உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்(Emmanuel Macron) பிரெஞ்சு மற்றும் உக்ரைன் பாதுகாப்புத் தொழில்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கியமான படி என்று தெரிவித்துள்ளார்.





