உலகம் செய்தி

வெளிநாட்டு கலாச்சாரத்தை ஊக்குவித்ததாக ஆப்கானிஸ்தானில் நான்கு இளைஞர்கள் கைது

“பீக்கி ப்ளைண்டர்ஸ்”(Peaky Blinders) என்ற பிரிட்டிஷ்(British) தொலைக்காட்சி தொடரால் ஈர்க்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்த நான்கு இளைஞர்களை ஆப்கானிஸ்தானில்(Afghanistan) உள்ள தாலிபான்(Taliban) தலைமையிலான அரசாங்கம் ஹெராட்டில்(Herat) தடுத்து வைத்து மறுவாழ்வு திட்டத்தில் சேர்த்துள்ளது.

நிகழ்ச்சியில் காணப்பட்ட பாணியை ஒத்த ஆடைகள் அணிந்து வெளிநாட்டு கலாச்சாரத்தை ஊக்குவித்ததாக ஆண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

20 வயதுடைய அஸ்கர் ஹுசினாய்(Asghar Hussain), ஜலீல் யாகூபி(Jalil Yaqoobi), அஷோர் அக்பரி(Ashor Akbari) மற்றும் தாவுத் ராசா(Daud Raza) ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அத்தகைய ஆடைகளை அணிந்திருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் பரவியதை அடுத்து, தாலிபானின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்காக அமைச்சகம் அவர்களைக் கைது செய்தது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!