இந்தியா செய்தி

கடலூரில் மின்னல் தாக்கி நான்கு பெண்கள் மரணம்

தமிழ்நாட்டின் கடலூர் (Cuddalore) மாவட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் (Veppur) அருகே உள்ள கழுதூர் (Kaludoor) கிராமத்தில் மக்காச்சோள பண்ணையில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மின்னல் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

அரியநாச்சி (Ariyanachi) கிராமத்தைச் சேர்ந்த கவிதா, பாரிஜாதம், சின்னப் பொன்னு மற்றும் ஆதிலட்சுமி ஆகிய நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. மேலும், மழைக்காலங்களில் திறந்தவெளி பகுதிகளில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி