ஆசியா செய்தி

பாகிஸ்தானில் நடந்த கட்சி பேரணி அருகே வெடிகுண்டு வெடித்ததில் நால்வர் பலி

பாகிஸ்தானில் அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசியல் பேரணிக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு வெடித்ததாக பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் போலீஸார் தெரிவித்தனர்.

“பிடிஐ பேரணி அங்கு சென்று கொண்டிருந்தது, ஆனால் பேரணி குறிவைக்கப்பட்டதா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்று மூத்த போலீஸ் அதிகாரி ஃபர்ஹான் ஜாஹிட் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட நால்வரைத் தவிர மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களப் பேச்சாளர் வசீம் பெய்க் தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரகசிய அரசாங்க ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பிடிஐ நிறுவனர் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!