அமெரிக்காவில் காணாமல் போன இந்திய வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மரணம்

மேற்கு வர்ஜீனியாவில் உள்ள ஒரு ஆன்மீகத் தலத்திற்குச் செல்லும் வழியில் காணாமல் போன நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் இறந்து கிடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பலியானவர்கள் ஆஷா திவான் (85), கிஷோர் திவான் (89), ஷைலேஷ் திவான் (86) மற்றும் கீதா திவான் (84) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“நியூயார்க்கின் பஃபேலோவிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நான்கு நபர்களும் வாகன விபத்தில் இறந்து கிடந்ததை மார்ஷல் கவுண்டி ஷெரிப் மைக் டௌஹெர்டி உறுதிப்படுத்தியுள்ளார்.” என்று ஷெரிப் அலுவலகம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
ஜூலை 29 அன்று பென்சில்வேனியாவில் உள்ள ஒரு பர்கர் கிங் விற்பனை நிலையத்தில் நால்வரும் கடைசியாகக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)