மும்பை-டெல்லி விரைவுச் சாலை மூடுபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் நால்வர் மரணம்
டெல்லி-மும்பை(Delhi-Mumbai) விரைவுச் சாலையில் மூடுபனி காரணமாக சுமார் 20 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிகாலை நடந்த இந்த விபத்தில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 15 முதல் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக சுமை ஏற்றப்பட்ட இரண்டு லாரிகள் மோதியதில் இருந்து இந்த சம்பவம் தொடங்கியது. மோதிய உடனேயே, பின்னால் இருந்து வந்த ஏனைய வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தப் பெரிய விபத்துக்கு, அந்தப் பகுதியைச் சூழ்ந்திருந்த அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட மிகக் குறைந்த தெரிவுநிலையே முக்கியக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





