பிரேசிலில் குழந்தை உட்பட நான்கு பழங்குடியினர் மீது துப்பாக்கி சூடு
தெற்கு பிரேசிலில் நடந்த தாக்குதலின் போது ஒரு குழந்தை உட்பட நான்கு பழங்குடியினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
தெற்கு பரானா மாநிலத்தில் உள்ள குய்ரா நகருக்கு அருகில் பழங்குடியின சமூகத்திற்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் காயமடைந்தனர், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவா குரானி மக்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காலில் சுடப்பட்ட நான்கு வயதுக் குழந்தை டோலிடோ நகரில் உள்ள அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, மேலும் இரண்டு நபர்கள் கால் மற்றும் முதுகில் தாக்கப்பட்டுள்ளதாக பழங்குடியினருக்கான மிஷனரி கவுன்சில் தெரிவித்துள்ளது.
தாடையில் சுடப்பட்ட நான்காவது நபர், மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான காஸ்கேவலில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறிய பொலிசார், வரலாற்று ரீதியாக நில மோதல்களை எதிர்கொண்ட பிராந்தியத்தில் புதிய வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக கூட்டாட்சி, மாநில மற்றும் நகராட்சி பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.