ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பார்வையற்ற பயணிகளுக்கு கடும் சிரமம்

பிரித்தானியாவில் பார்வையற்ற மற்றும் கண்பார்வை குறைபாடுள்ள பயணிகள் ரயில் பெட்டிகளுக்கும் நடைமேடைகளுக்கும் இடையிலான இடைவெளியை கடக்க பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

பார்வையற்றோர் நலனுக்கான தேசிய நிறுவனம் (RNIB) வெளியிட்ட அறிக்கையில், 82 சதவீத பயணிகள் இந்த இடைவெளியில் தவறி விழுந்து காயமடையும் அச்சத்தினால், பயணங்களைத் தவிர்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சிலர் ஓடும் ரயில்களில் சிக்கியும், கதவுகளில் மாட்டிக்கொண்டும் விபத்துகளை சந்தித்துள்ளனர்.

ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், பிரித்தானிய ரயில் நிலையங்களில் பார்வையற்றோருக்கான தொட்டுணரக்கூடிய வழிகாட்டிகள் வெறும் 20 சதவீத இடங்களில் மட்டுமே உள்ளன.

இதனால் சுயமாகப் பயணம் செய்வது அவர்களுக்கு கனவாகவே உள்ளது.

மேலும், முன்பதிவு செய்தாலும் ஊழியர்கள் வராததால் மூன்றில் இரண்டு பயணிகள் ரயில் நிலையங்களில் அநாதரவாக விடப்படுகிறார்கள்.

இதனால் 37 சதவீத பயணிகள் அத்தியாவசிய பயணங்களையும் ரத்து செய்துள்ளனர்.

பார்வையற்றோர் நலனுக்கான தேசிய நிறுவனம், புதிய ‘ரயில்வே சட்டத்தின்’ (Railways Bill) மூலம் ரயில் நிலையங்களை முழுமையாக அணுகக்கூடியதாக மாற்றுமாறு பிரித்தானிய அரசாங்கத்தை கோரியுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!