இந்தியப் பெருங்கடலில் நான்கு முறை நிலநடுக்கம்!! இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுகளுக்கு அப்பால் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நான்கு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக நில அதிர்வு தரவு மற்றும் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
4.8, 5.2, 5.8 மற்றும் 5.0 ரிக்டர் அளவில் நான்கு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.






