புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது!
திருகோணமலை- உப்புவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் மற்றும் உபகரணங்களுடன் பயணித்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் பயணித்த காரையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது
இவர்கள் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் வசிக்கும் 23 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 10 times, 1 visits today)





