பிரித்தானியாவில் வின்ட்சர் கோட்டையில் டிரம்ப் மற்றும் எப்ஸ்டீனின் படங்கள் காட்சிப்படுத்திய நால்வர் கைது

அமெரிக்க ஜனாதிபதியின் பிரித்தானியா பயணத்தின் போது டொனால்ட் டிரம்ப் மற்றும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் படங்களை ஒரு கோட்டையின் சுவரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்சிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அரசியல்வாதிகளை குறிவைக்கும் பெயர் பெற்ற லெட் பை டான்கீஸ் குழு, லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டையின் சுவர்களில் வீடியோ தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளனர்.
டிரம்ப் பிரிட்டனுக்கு வருவதற்கு சற்று முன்பு காட்டப்பட்ட காட்சிகளில், ஜனாதிபதியின் முகத்திரை, எப்ஸ்டீனின் உருவப்படங்கள், செய்தித்தாள் தலைப்புச் செய்திகள் மற்றும் இருவரும் ஒன்றாக நடனமாடும் காட்சிகள் ஆகியவை அடங்கும்.
இச்சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)