இந்தியாவில் 03 கொம்புகளை உடைய டைனோசரின் புதைபடிவம் கண்டுப்பிடிப்பு!
இந்தியாவில் மூன்று கொம்புகளை கொண்ட டைனோசரின் புதைபடிவம் கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹரன்பூர் மாவட்டத்தின் நதிக்கரைக்கு அருகில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது, டிரைசெராடாப்ஸ் (Triceratops) எனப்படும் இவ்வகையான டைனோசரின் புதைபடிவம் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதைபடிவம் மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த டைனோசர்கள் 100.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் (Cretaceous) காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த இயற்கை வரலாறு மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர், 35-40 மில்லியன் ஆண்டுகளாக இமயமலை அடிவாரத்தில் புதைந்து கிடக்கும் இந்தப் புதைபடிவம், எளிதில் பாதுகாக்கப்படும் நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்.
இது ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள அகழ்வாராய்ச்சியின் போது மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையான பல புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




