சென்னையில் நடைபெறும் பார்முலா-4 கார் பந்தயம்
சென்னையில் நாளை தொடங்க உள்ள பார்முலா-4 கார் பந்தயம் தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்த உள்ளது.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயத்தை நடத்த உள்ளது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.
3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது. தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் இந்த சர்க்யூட் அமைந்துள்ளது.
கார் பந்தயத்தை பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
மேலும், போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிறருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பொருளும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படாது.
தடை செய்யப்பட்ட பொருட்கள் –
கூர்மையான பொருள்கள்
ஆயுதங்கள்
லேசர்ஸ்
விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள்
ஒலி அமைப்புகள்
தீப்பற்றக்கூடிய பொருட்கள்
போதைப்பொருள் அல்லது புகையிலை பொருட்கள்
அங்கீகரிக்கப்படாத விளம்பர பொருட்கள்
முகாம் உபகரணங்கள்
பாட்டில்கள்
வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படாது
டிரோன்கள் அல்லது பறக்கும் சாதனம்
கேமராக்கள்