வட அமெரிக்கா

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் 100வது வயதில் காலமானார்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் தனது 100வது வயதில் காலமானார்.

ஜார்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவர் காலமானதாக கார்டர் மையம் மற்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனநாயகக் கட்சி சார்பில் 39 வது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம்மி கார்டர், 1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடிகளால் சூழப்பட்ட நிலையிலும் சிறப்பாக பணியாற்றினார்.

கேம்ப் டேவிட் உடன்படிக்கையின் படி மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், அதன் எதிரி நாடான எகிப்துக்கும் இடையே நீடித்த போரை முடிவுக்கு கொண்டுவந்ததில் கார்டரில் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதிகள் வரலாற்றில் அதிக வயதுவரை வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரிய ஜிம்மி கார்டர், கடந்த ஒக்டோபர் மாதம் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஜிம்மி கார்டரின் மரணம் குறித்து அவரது மகன் சிப் கார்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “என் தந்தை எனக்கு மட்டுமல்ல, அமைதி, மனித உரிமைகள் மற்றும் தன்னலமற்ற அன்பில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் ஒரு ஹீரோ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 24 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்